பிரதமர் மோடியிடம் நான் வைத்த கோரிக்கைகள் இது தான் - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் முதல்முறையாக டெல்லிக்கு பயணம் செய்து பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பல கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை பிரதமர் மோடியிடன் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தவை, “மேகதாது அணை கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ படிப்புகளுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்கப்பட வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு விரைந்து அனுமதி வேண்டும். இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். புதிய கல்விக் கொள்கை முழுமையாக திரும்பப்பெற வேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

சேது சமூத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.
சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகள் முன்வைத்ததாக தெரிவித்தார்.
எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்த்தின் தீர்ப்பை பொறுத்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு தடுப்பூசி தட்டுப்பாட்டை தெரிவிக்கக்கூடாது எனக் கூறுகிறது. அதை வைத்தே தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.