கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க -ஸ்டாலின் கடிதம்
கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 24 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் : கடந்த மார்ச் 25ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 20 மீனவர்களையும், கேரளத்தின் 4 மீனவர்களையும் உள்ளிடக்கிய படகு கத்தார் நாட்டு கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது.
கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள 20 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 24 இந்திய மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. @DrSJaishankar அவர்களிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) May 25, 2021
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களின் நிலையறியாது அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர் ஆகவே தமிழகத்தை சேர்ந்த 24 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.