சமூகநீதியை கொலை செஞ்சுட்டு.. விடுதிகளுக்கு பெயர் சூட்டும் ஸ்டாலின் - பொங்கிய அன்புமணி
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் ஸ்டாலின் சூட்டுவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சமூகநீதி விடுதிகள்
ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
அன்புமணி விமர்சனம்
சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது. வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ,
அப்படித்தான் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.