ஸ்டாலின்- கமல்ஹாசன் இன்று வேட்பு மனு தாக்கல்: சூடுபிடிக்கும் பிரசாரம்
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை, கொளத்துார் தொகுதியில் இன்று பகல் 12.30 மணிக்கு மனு தாக்கல் செய்கிறார். அதன்பின் அவர் தந்தை பிறந்த ஊரான திருவாரூரில் பிரசாரம் செய்கிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல், இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அங்கு மாலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
மனு தாக்கல், வரும், 19ம் தேதி நிறைவடைகிறது. ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் நடக்க உள்ளது. பிரசாரத்திற்கு குறைந்த நாட்களே உள்ளதால், அனைத்து வேட்பாளர்களும், திறந்த ஜீப்பில் நின்றபடி, தொகுதியை வலம் வர திட்டமிட்டுள்ளனர்.
இன்று முகூர்த்த நாள் என்பதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும், மனு தாக்கல் செய்ய உள்ளனர். அந்த சூட்டோடு, இன்றே ஓட்டு வேட்டையையும் துவங்குகின்றனர்.