ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ

admk dmk jayalalitha mkstalin sellurraju
By Irumporai Sep 29, 2021 08:29 AM GMT
Report

ரவுடிகளை அடக்குவதில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலவே, முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதை விரைவில் சீரமைக்க வேண்டும், மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.