அக்கறை இல்லாத ஸ்டாலின்..கலைஞர் இருந்திருந்தால்..அன்புமணி ராமதாஸ் சாடல்!

Anbumani Ramadoss Tamil nadu Viluppuram
By Swetha Sep 17, 2024 01:30 PM GMT
Report

 இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினர்.

அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினர்.

அக்கறை இல்லாத ஸ்டாலின்..கலைஞர் இருந்திருந்தால்..அன்புமணி ராமதாஸ் சாடல்! | Stalin Is Careless Says Anbumani Ramadoss

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என தொடர்ந்து திமுக அரசு பொய் சொல்லி வருகிறார். மத்திய அரசு தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் திசை திருப்பி வருகிறார்.

69 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. 115 சமுதாயம் பயன்பெறுகிறது. தமிழக மக்கள் தொகையில் 20.08 சதவீதம் மக்கள் தொகையில் உள்ளனர். இதில் இரு சமுதாயம் மட்டும் 14.08 உள்ளனர். தரவுகள் மூலம் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

அவர்களை கண்டு அதிகாரிகள்தான் அஞ்சுகின்றனர் - அன்புமணி

அவர்களை கண்டு அதிகாரிகள்தான் அஞ்சுகின்றனர் - அன்புமணி

அக்கறை இல்ல..

இது குறித்து பல முறை முதல்வரை சந்தித்துள்ளோம், ஆனால் தற்போது வன்னியர்ளுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என முதல்வர் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இன்றைக்கு இடஒதுக்கீடு கொடுத்திருப்பார். ஸ்டாலினுக்கு சமூகநீதி குறித்து அக்கறை இல்லை.தமிழ்நாட்டில் 109 உயர் காவல் அதிகாரிகள் உள்ளனர்.

அக்கறை இல்லாத ஸ்டாலின்..கலைஞர் இருந்திருந்தால்..அன்புமணி ராமதாஸ் சாடல்! | Stalin Is Careless Says Anbumani Ramadoss

இவர்களில் ஒருவர் மட்டுமே வன்னியர். 53 செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. டி.என்.பி.எஸ்.சியில் ஒருவர்தான் உள்ளார் அவரும் விரைவில் ஓய்வுபெற உள்ளார். திமுகவில் 23 சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர். ஆனால் ஒரு அமைச்சர். பட்டியல் சமூகத்தில் ஒரே ஒரு அமைச்சர்தான்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நன்கு தெரிந்துக்கொண்டே ஸ்டாலின் பொய் சொல்கிறார். பெரியார் பிறந்தநாளில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.