'அஜித் போல் இருங்கள்' -அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து பொதுமக்களுக்கு ஸ்டாலின் ஐபிஎஸ் அறிவுரை!
ஹெல்மெட்
தலைக்கவசம் என்பது உயிர்க் கவசம் ஆகும். ஆனால் நிறைய வாகன ஓட்டிகள் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து செல்வதில்லை. இதனால் தொடர்ந்து நிறைய விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போக்கு வரத்துத் துறை போலீசார் அபராதங்களும் விதித்து வருகிறார்கள். இருந்தும் பலர் இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தற்போது யாரேனும் சாலை விதிகளை பின்பற்றல் பயணித்தால் அவர்களை சக பயணிகளோ அல்லது பொதுமக்களோ யாரேனும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்கள் காவல் துறையை டேக் செய்து பதிவிட்டாலே போதும் அபராதம் வீடு தேடி வரும்.
ஸ்டாலின் ஐபிஎஸ்
அறிவுரை இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் ஹெல்மெட் அணிந்தபடி இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து ஸ்டாலின் ஐபிஎஸ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதில் 'பைக்கில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள், தலைக்கவசம் உயிர்க்கவசம்' என்று பதிவிட்டுள்ளார்.
பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்...
— Dr. R. Stalin IPS (@stalin_ips) August 2, 2023
தலைக்கவசம் உயிர்க்கவசம் pic.twitter.com/rb8rykFEQP
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil