திருச்சியில் வேளாண் சங்கமம் விழாவை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திருச்சி மாவட்டத்தில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
வேளாண் சங்கமம் நிகழ்ச்சி இன்று 29 ம் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருகளை வழங்குகிறார். நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் இந்த சங்கமத்தில் கலந்துரையாடப்படுகிறது.