மாணவர்களின் உளவியல் பிரச்சனை - விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர்!

M K Stalin Tamil nadu Death Kallakurichi
By Sumathi Jul 27, 2022 05:36 AM GMT
Report

பள்ளி மாணவர்களுக்கு உடல்,மன நல விழிப்புணர்வு அளிக்கும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் தற்கொலை

கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியது.

மாணவர்களின் உளவியல் பிரச்சனை - விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர்! | Stalin Inaugurated Mental Health Aware Vehicles

தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்களும், சில இடங்களில் அதற்கான முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

 விழிப்புணர்வு வாகனங்கள்

தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த வாகனத்தில் உளவியல் ஆலோசகர், மருத்துவர்கள் இடம்பெறுவர். தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும்.

பள்ளிகளில் மருத்துவ முகாம், தன்னமிக்கை குறும்படம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.