சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Corona Tamil Nadu Stalin
By mohanelango May 20, 2021 05:32 AM GMT
Report

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விரைந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும் படுக்கைகளை உருவாக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைதது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Stalin Inaugrates Corona Special Hospital In Salem

மேலும் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் சேலத்தைத் தொடர்ந்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்.