சூப்பர் ஸ்டார் யார்ன்னு கேட்டா.. முதலமைச்சர் பிரசாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என முனைப்புடன் களத்தில் பணியாற்றி வரும் திமுக, தாங்கள் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மேற்கோள்காட்டி பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து திமுக 2.0 ஆட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசினார். சூப்பர் ஸ்டார் யார் என்று தமிழகம் முழுவதும் தெரியும்.
களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார், திமுகவின் தேர்தல் அறிக்கை தான் சின்ன குழந்தை கூட சொல்லும், ஐபிஎல்-லில் சிக்ஸர்கள் அடித்து பார்த்திருப்பீர்கள்,
அதில் சிலவற்றை பார்க்கல்லாம் என கூறியபடி,
* முதல் சிக்ஸர் இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய் கூப்பன் வழங்கும் திட்டம், இதை வைத்து புதிய பொருளை வாங்கலாம் அல்லது பழைய பொருட்களை மாற்றி புதிய பொருள் வாங்கி கொள்ளலாம்.
* காலை உணவுத்திட்டத்தை 5 வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை உயர்த்த போகிறோம்.

* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* முதியோர் உதவித்தொகை, மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
* நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் என பேசினார்.
நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல் IBC Tamil