முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
Tamil Nadu
CM
Stalin
Cabinet Meeting
By mohanelango
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. கடந்த 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முதல்வரான பிறகு பல முக்கியமான திட்டங்கள செயல்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன.