மருத்துவக்கல்லுாரி வளாகத்திற்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த மாணவி அனிதா பெயர் - முதலமைச்சர் அறிவிப்பு
அரியலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவ வளாகத்திற்கு அனிதா பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாணவி அனிதா தற்கொலை
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அரியலுார் மாணவி அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை விட்ட மாணவி அனிதாவின் நினைவாக முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்துாரில் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
மருத்துவ வளாகத்திற்கு அனிதா பெயர் - முதலமைச்சர்
இந்த நிலையில் கடந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்ட அரியலுார் மருத்துவக்கல்லுாரியில் ரூ.22 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டத்திற்கு தற்போது அனிதாவின் பெயர் வைத்து, அனிதா மருத்துவ வளாகம் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த கட்டத்திற்கு தற்போது அனிதாவின் பெயர் வைத்து, அனிதா மருத்துவ வளாகம் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அரியலுார் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.