ஓ.என்.வி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

DMK Stalin Vairamuthu
By mohanelango May 27, 2021 06:20 AM GMT
Report

கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாளப் பல்கலைக்கழகம் வழங்கும் கவுரவமிக்க ஓஎன்வி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் இவ்விருது முதல் முறையாக கேரளாவைச் சாராத வேறு மொழி கவிஞருக்கு அளிக்கப்படுகிறது.

ஓ.என்.வி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Stalin Greets Vairamuthu For Winning Onv Award

இந்த நிலையில் ஓஎன்வி விருது பெற்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்று கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கவிஞர் வைரமுத்து.