மத்திய அரசின் அணுகுமுறையே போராட்டக் காட்சிகளுக்குக் காரணம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

india police farmlaw
By Jon Jan 26, 2021 07:08 PM GMT
Report

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. அதன் அடுத்தகட்டமாக இன்று டெல்லியில் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி நடைபெற்றது. ஆனால் அந்த பேரணியில் சில இடங்களில் வன்முறை வெடித்தது.

காவல்துறை விவசாயிகள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. விவசாயிகள் செங்கோட்டை முன் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் அணுகுமுறையே #FarmersProtests போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் #FarmLaws நிறைவேறியே இருக்காது!  

 

வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.