கருணாநிதி நினைவு நாள்: கனிமொழி இல்லத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர்

Stalin Udhayanidhi Kanimozhi
By mohanelango Jun 03, 2021 06:48 AM GMT
Report

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. ஸ்டாலின் குடும்பத்தினர் சிஐடி நகரில் உள்ள கனிமொழி இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் கலைஞரின் சி.ஐ.டி காலனி இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தோம். உடன் ராசாத்தி பாட்டி, @KanimozhiDMK அத்தை, கழக நிர்வாகிகள் இருந்தனர்.

கருணாநிதி நினைவு நாள்: கனிமொழி இல்லத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் | Stalin Family Visits Kanimozhi House Cit Nagar