முதல்வரான ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

family present stalin family gift
By Praveen May 07, 2021 06:00 PM GMT
Report

முதல்வரான ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளனர்.

தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென்ற மு.க.ஸ்டாலினின் ஆசை இன்று நிறைவேறிவிட்டது. தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஸ்டாலின், இன்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ ஆகிய நான் என்று ஸ்டாலின் கூறும் போது அவரது நா தழுதழுத்தது.

அவரது மனைவி துர்கா, ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிகழ்ச்சி நிரலை கண்டு களித்தார் மு.க.ஸ்டாலின். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற அவர் தனது தந்தை கருணாநிதி புகைப்படத்தை கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினார்.

அப்போது, ஸ்டாலின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அங்கிருந்த ஸ்டாலினின் சகோதரி, கட்டியணைத்து அவரை தேற்றினார். இதையடுத்து தலைமை செயலகம் சென்ற அவர் முதல்வர் இருக்கையில் அமர்ந்து, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வராக ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் கொடுப்பதற்கு தான்.

பதவியேற்ற முதல் நாளே, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஸ்டாலினுக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது, ஸ்டாலினுக்கு ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

முதல்வரான ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் கொடுத்த  இன்ப அதிர்ச்சி | Stalin Family Presnt Gift Of Art Of Past Cm