டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு இது தான் காரணம்.. முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Corona Lockdown Stalin Tasmac
By mohanelango Jun 14, 2021 04:52 AM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன

இதற்கான காரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார், அதில், “கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தன; மக்களின் எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் அதை முழுமையாக பின்பற்றினால்தான் முழுமையான வெற்றி சாத்தியம்.தளர்வு அறிவித்ததற்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளது; விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

போலி மது ,கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்து விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற இயங்கும். கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்.

முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் . தொற்று பரவலை விட வல்லமை மக்களுக்கு உள்ளது. மக்கள் சக்தியே உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார் .