ஸ்டாலின் வெற்றிக்கு காரணம் துர்காவின் பக்தி தான் - எஸ்.வி சேகர்
திமுக தலைவரும் தமிழகத்தின் புதிய முதல்வரான முக ஸ்டாலின் வெற்றிக்கு அவரது மனைவி துர்காவின் பக்தி தான் காரணம் என எஸ்.வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' ஆகிய நான் என்ற முழக்கத்தோடு பதவியேற்றார். அந்த சமயத்தில் காரணத்தில் இருந்த மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானது.
இந்த நிலையில் ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமே அவரது மனைவி துர்கா தான் என எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் திருமதி துர்காஸ்டாலின்.ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியை கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.