மீண்டும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு தள்ளிப்போகிறதா?
திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், சிபிஎம்-க்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கட்சிகள் விரும்பிய தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிகள் இறுதியாவதில் இழுபறி நீடிப்பதாகவும், எனவே வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த பட்டியல் நாளை வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவை பொறுத்தவரை 173 இடங்களிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 இடங்களிலும் போட்டிடுகின்றனர்.