திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டுருந்தார். இந்த கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த அறிக்கையில், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
இதனிடையே, பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ள நிலையில், முக ஸ்டாலின் தலைமையில் திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்களிடம் அவர் பேசியதாவது,
திமுக கூட்டணி வெற்றியை வீதியில் வந்து கொண்டாட வேண்டாம். வீடுகளிலேயே கொண்டாடுங்கள். வாக்குஎண்ணும் இடங்களில் குவிந்தோ, ஒன்று கூடியோ வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெற்றியை கொண்டாடுவதை விட திமுகவினரின் பாதுகாப்பதுதான தலையாய நோக்கம் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.
வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம். நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
இவ்வாறு அந்த கூட்டத்தில் அவர் பேசினார்.

