ஆரிய வித்தைகளை தமிழகம் ஏற்காது - திருவள்ளுவர் சர்ச்சைக்கு ஸ்டாலின் கண்டனம்

admk bjp ntk
By Jon Feb 27, 2021 11:46 AM GMT
Report

ஹிந்தி பாடப் புத்தகம் ஒன்றில், திருவள்ளுவர் படத்தில் குடுமி வைக்கப்பட்டுள்ளது, திருநீறு பூசப்பட்டுள்ளது என்று கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக உள்ளது. இது தொடர்பான படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதில் திருவள்ளுவர் சாப்பிடும்போது அவர் மனைவி வாசுகி பரிமாறும் காட்சி உள்ளது. திருவள்ளுவர் தலையில் குடுமி உள்ளது. சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடப் புத்தகம் இது என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: CBSE 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது.

ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.