ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன? - கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த அரண்மனைப்புதூர் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என உறுதியளித்தார். ஆட்சியில் இல்லாமலேயே கொரோனா காலத்தில் திமுக பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்ததாகவும், அதனை மக்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிப்பதில் சற்றும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
அதுமட்டுமின்றி பன்னீர் செல்வம் எதோ அதிஷ்டத்தில் 3 முறை முதலவர் ஆனதாக விமர்சித்துள்ளார்.