ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நாளை மாலை உரிமை கோருகிறார் ஸ்டாலின்
தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி அமைக்க கோரி நாளை மாலை ஆளுநரை சந்திக்கிறார் முக ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக திரு முக ஸ்டாலின் அவர்கள் தேர்வானார்.
இதனையடுத்து அவர் வருகிற மே 7ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வர் பதவி ஏற்பு விழா நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.
7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.