எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அதிகாரிகளுடன் எழு தமிழர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை ஆளுநர் நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு பின்னர் நிராகரித்தார்.
திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஏழு தமிழர் விடுதலையை உறுதி செய்வோம் எனத் தெரிவித்திருந்தது.

திமுக வென்று ஆட்சி அமைத்துவிட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் தன்னுடைய இல்லத்தில் எழுவர் விடுதலை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்கதல் IBC Tamil