சேலத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக சேலம். திருப்பூர், கோயம்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளை திறந்து வைப்பதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார்.
அப்போது சேலத்தில் மகுடஞ்சாவடி எனும் இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் கலந்துரையாடினார். அவர்களின் தேவைகள் மற்றும் அங்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) May 20, 2021
இத்தகைய கள ஆய்வின் மூலமாக அரசு மருத்துவமனைகளின் வசதிகளை நேரடியாக அறிந்து கொள்கிறேன்; மருத்துவர்கள் - செவிலியர்களின் தேவைகளையும் கேட்டறிகிறேன்.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முன்மாதிரியானதாக மாற்றப்படும். pic.twitter.com/FBcciydztm
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேலம் ஆட்சியர் திரு எஸ்.கார்மேகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.