ஸ்டாலினுக்கு வழக்கு போட்டது தெரியாது,முடிஞ்சா கைது பண்ணுங்க - சவுக்கு சங்கர் சவால்..!
ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த அவர்,எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மதம் இல்லை என்றார்.
எக்காரணத்தை கொண்டும் முன் ஜாமீன் பெற போவதில்லை என்றும்,என்னை கைது செய்து கொள்ளட்டும் என்றார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தன் மீது உள்ள கோபத்தால் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
திமுக ஜாபர் சேட்டால் அழிந்தது.இப்போ சங்கர் ஜிவாலால் அழிய போகிறது என்று ஆவேசமாக கூறினார். இவ்வளவு நடந்தும் இதுவரை அவரை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றால் இது என்ன அரசாங்கம் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் முழு தகவலுக்கு முழு வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்.