ஸ்டாலின் மகள் வீட்டில் சிக்கியது என்ன? வைரலாகும் வருமான வரித்துறை ரசீது
ட்டமன்ற தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் அதிமுக திமுக கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றன. அதே சமயம் கடந்த சில வாரமாக வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில்இறங்கி உள்ளனர். திமுக வேட்பாளர்கள் வேலு, அண்ணாமலை, செந்தில்பாலாஜி ஆகியோர் வீடுகளிலும், அதிமுக வேட்பாளர்களான விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வலைவீசு சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை சோதனையின் போது குடும்பச் செலவுக்காக அவர்கள் வைத்திருந்த ரூ.1.36 லட்சம் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதனை கைப்பற்றிய அதிகாரிகள், அது கணக்கில் காட்டப்பட்ட பணம் என்பதால் அவர்களிடமே திருப்பி கொடுத்த அதிகாரப்பூர்வ ரசீது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.