இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை, காவேரி மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அப்போது, தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே, இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது குறித்து ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் :
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகப் போட்டுக் கொள்ளவும்.
வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில், தங்கள் மருத்துவரோடு ஆலோசித்து செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! எனப் பதிவிட்டுள்ளார்.