எங்கள் திட்டங்களை ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் - கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அந்த தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாக நான் அறிவித்த திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பி அடித்துள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மிண்ட் தங்க சாலையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரைக் பொதுகூட்டம் நடந்தது. இந்த பரப்புரைக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர வருமாறு காங்கிரஸ் ஏன் அழைத்தது. தன்னுடைய கூட்டணி வெல்லாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதற்கு பதலடி கொடுத்து பேசிய கமல், தான் குடும்ப தலைவிகளுக்காக அறிவித்த திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்படியே மீண்டும் தன்னுடைய திட்டம் போல் சொல்லி வருகிறார்.

தன்னுடைய கட்சி சார்பில் 'நாமே தீர்வு' என்ற தலைப்பை ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' என்று மாற்றி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தண்ணீரே போகாத வீராணம் குழாயில் இருந்து ஊழல் தொடங்கியது.
ஏழு உறுதி மொழி உட்பட தான் அறிவிக்கும் பரப்புரை பிரகடனங்களை திமுக காப்பி அடிக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் தன்னுடைய பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசினார்.