ஸ்டாலின் போட்ட செக்மேட், (3) புதிய கூட்டணிக்கு காங்கிரஸ் தயங்குவது ஏன்?
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையிலும்,மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் ஏன்? மூன்றாவது அணிக்கு தயாராகவில்லை ஒரு பெரிய தேசிய கட்சி மூன்றாவது அணிஅமைக்க தயங்குவது ஏன் ? அதற்கான காரணங்களை விளக்குகின்றது இந்த தொகுப்பு: திமுகவை விட்டு காங்கிரஸ் விலகாமல் இருப்பதற்கு சில முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன.
ஏற்கனவே டெல்லி காங்கிரஸ் மேலிடம் நீங்கள் எடுப்பதுதான் கடைசி முடிவு. திமுக கூட்டணி குறித்தும், போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் முடிவு எடுக்க தமிழக காங்கிரசுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலிட பொறுப்பாளர்கள் வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை கவனித்தாலும் கூட முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக தலைமைக்கும், தமிழகத்தில் இருக்கும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தும் கூட காங்கிரஸ் கட்சி முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. காங்கிரசுக்கு 24-27 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் திமுக விடா கண்டனாக உள்ளது என்பது எல்லோருக்கும் அறிந்த கதைதான். ஆனால் காங்கிரஸ் கட்சியோ,இது போதாது இன்னும் வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்து வருகிறது காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்பதால் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
இன்றும் தொகுதி குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான் இழுபறியை பயன்படுத்தி காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் பழ கருப்பையா மூலம் தூது விட்டு பார்த்தது. எங்களிடம் 40 தொகுதி இருக்கு திமுக வை விட்டு வாருங்கள் என காங்கிரசுக்கும் மக்கள் நீதி மய்யம் நூல்விட்டு பார்த்தது.
இதனால் மூன்றாவது அணி அமையாலாம் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீர் என்று மூன்றாவது கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவிட்டது . எங்களுக்கு 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை என்று கே.எஸ்.அழகிரி அதிரடியாக அறிவித்துவிட்டார். மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் பேசுவதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய்.
அதில் உண்மையில்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கூறியுள்ளார். திமுகவை விட்டு காங்கிரஸ் செல்லாமல் இருக்க காரணம் தற்போது மூன்றாவது அணிக்கு சென்று காங்கிரஸ் தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் இருக்கிற வாக்கு வங்கியும் போய்விடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது.
அதே சமயம் 3வது அணி என்பது ஒரு வேளை பாஜக - அதிமுக கூட்டணிக்கு வளர்ச்சியாக கூட அமைந்து விடலாம், ஆகவே பாஜக தமிழகத்தில் வளர கூட்டணி காங்கிரசே காரணமாக இருக்க கூடாது என்று அந்த கட்சி நினைக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதை ராகுல் காந்தியும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
தமிழகம் தமிழகம் வந்து மக்களிடம் பேசி இருக்கிறேன்.பிரச்சாரம் செய்து இருக்கிறேன். இப்போது போய் காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று ராகுல் கருதுகிறார்.

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பிரியாணி சாப்பிட்டு டீ குடித்து, தண்டால்எடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்து ராகுலுக்கு தமிழக தேர்தல் முக்கியம் என்பதால் திமுகவை விட்டு விலக காங்கிரஸ் கடுமையாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே இந்த முறையும் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பது தெளிவாக புரிகிறது.