அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன் மகிழ்ச்சி! - முதலமைச்சர் வாழ்த்து

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Apr 11, 2023 08:25 AM GMT
Report

முகச் சிதைவு அறுவை சிகிச்சைக்கு பிறகு பள்ளிக்கு சென்ற சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தரவால் சிறுமிக்கு அறுவை சிகிச்சை 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஊடகங்களில் சிறப்பு செய்தியாக வெளியானது.

இதனையடுத்து, சிறுமி டான்யா அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதித்த பிறகு தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்பு, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, சிறுமி டானியாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். 

Stalin congratulates school going child daniya

பள்ளி செல்லும் டானியாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து 

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பள்ளி சென்ற சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Stalin congratulates school going child daniya

அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி! ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்!  என பதிவிட்டுள்ளார்.