விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..40 பேர் படுகாயம் - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி
தஞ்சாவூர் அருகே சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
கேரளா மாநிலம் திரிசூரில் இருந்து வழிபாட்டிற்கு வந்த சுற்றுலா வாகனம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லில்லி என்ற 63 வயது பெண்ணும், ரியான் என்ற 9 வயது சிறுவனும் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு இழப்பிடாக ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/0aHjtpfv6D
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 2, 2023