சீமான் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Seeman
DMK
Stalin
By mohanelango
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று இயற்கை எய்தினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் திரு.சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்