கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin Government of Tamil Nadu Chennai
By Thahir Jul 22, 2023 02:50 PM GMT
Report

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன

2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

Stalin

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன.  

தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும்

தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

Stalin

கலைஞர் 100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.