உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கான ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

chief minister stalin officer new thittam
By Praveen May 07, 2021 10:06 AM GMT
Report

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரன் சதீஷ் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தமிழ அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.