'நான் ஆஜராக தயார்' - முதல்வர் பழனிசாமிக்கு சவால்விட்ட மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மிகத் தீவிரமான அரசியல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவை குறிவைத்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் முக்கியமான விஷயங்களுள் ஒன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க நீதுபதி ஆறுமுகசாமி ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால் அதன் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஜெயலலிதாவின் மரணத்திற்கு மு.க.ஸ்டாலினும் திமுகவும் தான் காரணம் என முதல்வர் கூறியிருந்தார்.
அதற்கு ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். நான் தான் காரணம் என்றால் விசாரணைக்கு உத்தரவிடட்டும் நான் நேரில் ஆஜராக தயார் எனஹ்த் தெரிவித்துள்ளார்.