அவதூறு வழக்கில் ஆஜராக முக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது

case admk dmk stalin
By Praveen Apr 16, 2021 10:00 PM GMT
Report

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகவும், சம்மன் அனுப்பவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை (கவுண்டவுன்) குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் (ரூபாய் 30 கோடி ஊழல்) விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, முதலமைச்சர், அமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.

அந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, மே 6- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.