பிறந்த நாளையொட்டி கலைஞர், அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

M K Stalin Government of Tamil Nadu DMK
By Thahir Mar 01, 2023 03:37 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை துவங்கியவரும் முன்னாள் முதலமைச்சருமான அறிஞர் அண்ணா நினைவிடத்தில், அதே போல,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

M.K.Stal

தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கும் முதலமைச்சர் 

அதன் பிறகு அண்ணா அறிவாலயம் புறப்பட்டுள்ளார். அங்கு தொண்டர்களை சந்திக்க உள்ளார் . அங்கு தொண்டர்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை வழங்க உள்ளார்.

உடன் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு , அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா என பலர் இந்த முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.