அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு அறிவிக்கும் திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என்று 19 துறைகளை சேர்ந்த செயளாலர்களுடன் நடத்திய முதல் நாள் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சரி அல்லது சிறிய சேவை திட்டமாக இருந்தாலும் சரி அனைவரும் அற்பணிப்பு உணர்வுடன் செய்பட வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சாலை அமைத்தல், குடிநீர் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வேளைவாய்ப்பு திட்டங்களை மக்கள் பெருமளவில் எதிர்ப்பார்க்ககூடிய திட்டங்கள் என்பதால் அவற்றில் அதிகளவில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திட்டங்களை நிறைவேற்றும்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும் எனவும் துறைசார்ந்த செயளாலர்களுக்கு கூறப்பட்டுள்ளது.