பேரிடர் காலத்தில் உதவ முன்வந்த "பொன்மகள்" : முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்

Mk Stalin Covid relief fund Mettur young girl
By Petchi Avudaiappan Jun 13, 2021 11:14 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கட்டுரை
Report

மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண் வேலை கேட்டு எழுதிய கடிதம் தன்னை கவர்ந்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அதில் மேட்டூரை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண், கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 பவுன் செயினை கொடுத்ததோடு, வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் அளித்துள்ளார்.

பேரிடர் காலத்தில் உதவ முன்வந்த "பொன்மகள்" : முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம் | Stalin Appreciate Young Girl Who Give Covid Fund

அதில் இரா. சௌமியா ஆகிய நான் BE. கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்.என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 .03 .2020 அன்று இறந்து விட்டார்கள்.

எனது தந்தை பணி ஓய்வுப் பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்து விட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச்செலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்த பிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம் .

எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக ரூபாய் 7000/-(ஏழாயிரம்) மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாகை ரூபாய் 3000/- (மூவாயிரம்) போக ரூ.4000/- (நாலாயிரம்) வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை வாங்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன்.

பேரிடர் காலத்தில் உதவ முன்வந்த "பொன்மகள்" : முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம் | Stalin Appreciate Young Girl Who Give Covid Fund

எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்" என கூறியிருந்தார்.

இதனைப் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.