கலைஞர் என்றாலே சாதனை தான் - மாரத்தானும் அப்படித்தான் - ஸ்டாலின் பெருமிதம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டமாகதிமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
மாரத்தான் போட்டி
கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் என பல பிரிவுகளாக மாரத்தான் போட்டி இன்று சென்னையில் நடத்தப்பட்டது. கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கிய இந்த போட்டி சென்னை தீவுத்திடலில் முடிவடைந்தது.
ஸ்டாலின் பெருமிதம்
இந்த மாரத்தான் போட்டியில் 73 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ்களும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 73,206 பேர் கலந்து கொண்டதால் இந்த போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அரசு அதிகாரிகள், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியுள்ளனர் என்ற தெரிவித்தார்.
மேலும், கலைஞர் என்றாலே சாதனை தான் என்றும் இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை செய்துள்ளது என்று முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். எனவே இது சாதாரண மாரத்தான் கிடையாது, ஒரு சமூக நீதி மாரத்தான். இதில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.