வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் போது ஸ்டாலின் செய்த செயல்! தொண்டர்கள் பாராட்டு
dmk
stalin
candidate
By Jon
திமுக வேட்பாளர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரை கடைசியாக அறிவித்து தொண்டர்களின் பாராட்டை பெற்றுள்ளார் முக ஸ்டாலின். தமிழகத்தின் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நேற்று வெளியிடப்பட்டது, நேற்று கட்சியை வெளியிடும் போது, அவருடைய பெயரை வரிசையில் தான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் தனது பெயரை தான் முதலில் அறிவிப்பார் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதிய நிலையில், தன்னுடைய பெயரை கடைசியாக அறிவித்தார்.
தலைவராக இருந்தும் தன்னுடைய பெயரை கடைசியாக அறிவித்ததால், அவரின் பெருந்தன்மையை நினைத்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.