கொரோனா பணியில் உயிரழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தது தமிழக அரசு

Stalin Doctors Relief
By mohanelango May 12, 2021 05:47 AM GMT
Report

கொரோனா பணியில் உயிரழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பணியில் இருந்த 43 மருத்துவர்கள் தற்போது வரை உயிரழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு இந்த இழப்பீடு தொகை வழங்கப்படும்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30000, செவிலியர்களுக்கு ரூ. 20000, இதரப் பணியாளர்களுக்கு ரூ. 15000 மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.