கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் என்னென்ன?
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அவை, தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும்.
திருவாரூரில் ரூ.30 கொகுடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ரூ.70 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது வழங்கப்படும். வருடம் தோறும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ரூ.5 இலட்சம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் களப்பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

