ஒரே மேடையில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின்
தமிழகத்தில் ராகுல் காந்தி மற்றும் முக ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா, கர்நாடகா முதலமைச்சர்கள் வரவுள்ளனர்.

பிரியங்கா காந்தியும் வருகிறார், இன்னும் ஒரு சில தினங்களில் தேதிகள் அறிவிக்கப்படும், ராகுல் காந்தி, முக ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல்காந்தி புதுச்சேரி வந்த போது, தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் இருந்தது, ராகுல் காந்தியும் கேரளாவுக்கு செல்ல வேண்டி இருந்ததால் இருவரால் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்கமுடியவில்லை என தெரிவித்தார்.

வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம் IBC Tamil
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan