ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் ஒளி விளக்கு அம்பேத்கர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

DMK AmbedkarJayanti2021 MKStalin
By Irumporai Apr 14, 2021 06:36 AM GMT
Report

சமூகம்,சட்டம்,கல்வி, பொருளாதாரம், அரசியல்,வரலாறு, தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கர் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தனது மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்துஇன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது.

சட்டம் என்பதற்கும் மேலாக மிகச்சிறந்த சமூக ஆவணம் எனப் பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணம் என குறிப்பிடுள்ள ஸ்டாலின். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள்.

விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்' என்றார் அவர்.

அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.