முக ஸ்டாலினை உரசிப்பாக்கும் முக அழகிரியின் பிறந்தநாள் போஸ்டர்கள்
முக அழகிரியின் பிறந்தநாள் தினத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் திமுக தலைவர் முக ஸ்டாலினை உரசிப்பாகும் வகையில் உள்ளதா தகவல் வெளியாகியுள்ளன. திமுக கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக கடந்த 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் முக அழகிரி.
அதன் பிறகு நேரடி அரசியலில் எடுபடாமல் இருந்து வந்த அழகிரியை கட்சியில் சேர்க்க அவரது அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினார். இந்த நிலையில் வருகிற ஜனவரி 30ம் தேதி முக அழகிரி அவர்களுது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடும் வகையில் ஒட்டிய போஸ்டர்கள் சர்சையைக் கிளப்பியுள்ளன.
'ஐ பேக் தேவையில்லை- ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும்' என்ற வாசகங்களோடும், 'சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம்' என மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், ஸ்டாலினை விமர்ச்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.