அதிமுக தேர்தல் அறிக்கையைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது - பன்னீர்செல்வம்
அதிமுக தேர்தல் அறிக்கையைப் பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது என பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையம் வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதிமுகவின் வெற்றி வாய்ப்புக் குறித்தக் கேள்விக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
ஸ்டாலின் ஜாதகம் குறித்தக் கேள்விக்கு, நான் ஜோஸ்யகாரன் இல்லை என்றார். திமுகவின் தேர்தல் அறிக்கை செயல்படுத்தக் கூடியது, அதிமுகவின் தேர்தல் அறிக்கை செயல்படுத்த முடியாதது என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, அதிமுக தேர்தல் அறிக்கையை நாங்கள்தான் வெளியிட்டு இருக்கிறோம். நாங்கள்தான் செயல்படுத்தப் போகிறோம்.
அதிமுக தேர்தல் அறிக்கைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது” என்று துணை முதல்வர் OPS மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். உடன் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உடன் இருந்தனர்.