நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ”ஸ்டாலின் தொடரட்டும் 2026” பேனர்

M K Stalin
By Fathima Feb 20, 2026 12:15 PM GMT
Report

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின.

ஷிவம் துபே சிக்சர் அடிக்கும்போது, அந்த பந்து சென்ற ஸ்டேண்டில் 2 பேனர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

ஒரு பேனரில் ”ஸ்டாலின் தொடரட்டும் 2026“ எனக் குறிப்பிட்டிருந்தனர், மற்றொரு பேனரில் #Ban TVK என இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ”ஸ்டாலின் தொடரட்டும் 2026” பேனர் | Stalin 2026 Banner In Modi Stadium